சீனாவிற்கு 4 நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது சீனா வருகையின் இரண்டாவது நாளான இன்று, உள்ளூர் நேரப்படி மாலை 4.28 மணியளவில் தலைநகர் பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சீனா, ஹைனானில் நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் ஆசியாவிற்கான போவா வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர், மதியம் 12.30 மணியளவில் ஹைனானிலிருந்து பெய்ஜிங்ற்குப் புறப்பட்டார்.
பிரதமரை, பெய்ஜிங் விமான நிலையத்தில் சீனாவிற்கான மலேசியாவின் துணைத் தூதர் சண்முகம் சுப்பிரமணியமும், சீன வெளியுறவு துணை அமைச்சர் சுன் வெய்டொங்கிற்கும் வரவேற்றனர்.
நாளை வெள்ளிக்கிழமை, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மரியாதை நியமித்தமாக பிரதமர் அன்வார் சந்திக்கவிருக்கிறார்.

Related News

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்

துரோனோ அருகே பெட்ரோல் நிலையக் கழிவறையில் ஆடவர் சடலம்

ஒரு வருடமே வேலை… விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நலன்கள்


