புக்கிட் மெர்தஜாம், ஜூலை 22-
கடந்த சனிக்கிழமை, பினாங்கு, புக்கிட் மெர்தஜாம்-இல் உள்ள ஒரு உற்பத்தி தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில், 64 வயது லாரி ஓட்டுநர் இரும்பு அலமாரிக்கும் லாரிக்கும் இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர், லாரியினுள் அமராமல், வெளியில் நின்றவாறு கதவைத் திறந்து, லாரியை இயக்கியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பினாங்கு வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குனர் ஹைரோசி அஸ்ரி கூறியுள்ளார்.
லாரி எதிர்பாராவிதமாக முன்னோக்கி நகர்ந்த வேளையில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விபத்து மீதான விசாரணை முழுமை பெறும் வரை, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை, தனது செயலாக்கத்தை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஹைரோசி அஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.








