Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பேரா சுல்தானை அணுகிய மாது தஞ்சோங் ரம்புத்தான் மருத்துமனைக்கு அனுப்பப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பேரா சுல்தானை அணுகிய மாது தஞ்சோங் ரம்புத்தான் மருத்துமனைக்கு அனுப்பப்பட்டார்

Share:

ஈப்போ, செப்டம்பர்.03-

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரா மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை நோக்கி அணுகியதற்காகக் கைது செய்யப்பட்ட மாது, உலு கிந்தா, தஞ்சோங் ரம்புத்தான், பஹாகியா மன நல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

41 வயது மாதுவைத் தடுத்து வைப்பதற்கு பெறப்பட்ட 3 நாள் தடுப்புக் காவல் அனுமதி இன்று புதன்கிழமையுடன் முடிவுற்றதைத் தொடர்ந்து மன நல சோதனைக்காக அந்த மாது பஹாகியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

Related News