கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-
ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியைத் தலைக்கீழாகக் கட்டப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் துறை 5 விசாரணை அறிக்கைகளைச் சட்டத்துறை அலுவலகத்திடம் சமப்பித்துள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதுவரையில் இது போன்று 6 சம்பவங்கள் நடந்துள்ளன. ஐந்து சம்பவங்கள் மீதான விசாரணை அறிக்கைகள் மட்டுமே சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜோகூரில் இரண்டு சம்பவங்களும், பினாங்கில் இரண்டு சம்பவங்களும் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தலா ஒரு சம்பவமும் நிகழ்ந்து இருப்பதாக ஐஜிபி தெரிவித்தார்.








