Sep 9, 2026
Thisaigal NewsYouTube
அதீத வடிவ மாற்றம்: ஜேபிஜே சோதனையின் சிக்கிய 37 வாகனங்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

அதீத வடிவ மாற்றம்: ஜேபிஜே சோதனையின் சிக்கிய 37 வாகனங்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ஏர் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அதீத மாற்றங்கள் செய்யப்பட்ட 37 வாகனங்களை சாலை போக்குவரத்துத் துறையான ஜேபிஜே பறிமுதல் செய்துள்ளது.

ஓப்ஸ் எக்ஸ்ட்ரீம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையானது, அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை, குறிப்பாக ஜாலான் ராஜா லாவுட் உள்ளிட்ட தலைநகரின் முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் மொத்தம் 156 வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட நிலையில், 97 வாகனங்கள் மீது பல்வேறு விதிமீறல்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில வாகனங்கள் சாலையைத் தொடும் அளவுக்கு தாழ்த்தப்பட்டிருந்ததாகவும், சில வாகனங்களில் தீப்பிழம்புகளை வெளியேற்றும் வகையில் எக்ஸ்சோஸ் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய எக்ஸ்சோஸ் மாற்றங்களுக்கு மட்டும் சில வாகன உரிமையாளர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் வரை செலவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையில் பல்வேறு விதிமீறல்களுக்காக 485 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில், விதிமுறைகளுக்கு மாறான பதிவு எண்கள் தொடர்பாக 97 வழக்குகளும், காலாவதியான வாகன உரிமங்கள் தொடர்பாக 66 வழக்குகளும், காப்பீடு இல்லாதது தொடர்பாக 57 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், அதிக நிறமிடப்பட்ட கண்ணாடிகள் தொடர்பாக 44 வழக்குகளும், எக்ஸாஸ்ட் விதிமீறல்கள் தொடர்பாக 77 வழக்குகளும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Related News