மாராங், ஜாலான் புக்கிட் கோர் சாலையில் இன்று மதியம் லாரி மோதியதில் 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
முஹமட் அஃபிக் இஸுடின் அஸார் என அடையாளம் காணப்பட்டுள்ள அம்மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதியம் 1.10 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் இசுஸு லாரியும், மாணவர் ஓட்டிச் சென்ற ஹோண்டா C100 மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.
இரு வாகனங்களும் ஒரே திசையில் சென்று கொண்டிருந்த போது, சாலையின் இடதுபுறத்தில் சென்று கொண்டிருந்த மாணவர் திடீரென U-திருப்பம் செய்ததால் பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவரின் உடல் கோலா திரங்கானு, சுல்தானா நூர் ஸாஹிரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.








