பினாங்கு காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகம், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்ற முறைகேடுகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற மாதந்திரக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பதவி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
விசாரணை அதிகாரிகள், குறிப்பாக தடுப்புக் காவல் கோரிக்கை தொடர்பான சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றி, தெளிவான மற்றும் நியாயமான காரணங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
மேலும், விசாரணைகள் வெளிப்புறத் தலையீடுகள் இன்றி தொழில்முறையாக நடைபெறுவதை பிரிவு மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றிய 20 போலீஸ் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.








