Sep 8, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசிய எரிமலைச் சாம்பல் மலேசியாவை அடையும் அபாயம் குறைவு - மெட்மலேசியா தகவல்
தற்போதைய செய்திகள்

இந்தோனேசிய எரிமலைச் சாம்பல் மலேசியாவை அடையும் அபாயம் குறைவு - மெட்மலேசியா தகவல்

Share:

இந்தோனேசியாவின் அனாக் கிராகாத்தாவ் எரிமலைச் சாம்பலானது மலேசியாவை வந்தடையும் அபாயம் சற்று குறைவாகவே இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.

தற்போதைய காற்றின் திசை மற்றும் வேகத்தின் அடிப்படையில், சாம்பல் மேகம் பெரும்பாலும் சுண்டா நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்தோனேசியப் பகுதிகளில் குவிந்துள்ளதாக மெட்மலேசியா தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், காற்றின் திசை மற்றும் வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது எரிமலையின் தொடர் வெடிப்புகள் சாம்பலின் நகர்வை மாற்றக்கூடும் என்பதால் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனாக் கிராக்காத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்புகளால் எரிமலைச் சாம்பல் பரவி, 6 விமான நிலையங்களில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதனால் ஜகார்த்தா–கோலாலம்பூர் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

எரிமலைச் சாம்பல் மலேசிய வான்வெளியை அடைந்தால், விமானப் போக்குவரத்து முக்கியமாக பாதிக்கப்படும் என மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

Related News

மாராங்கில் லோரி - மோட்டார் சைக்கிள் விபத்து: 18 வயது கல்லூரி மாணவர் பலி

மாராங்கில் லோரி - மோட்டார் சைக்கிள் விபத்து: 18 வயது கல்லூரி மாணவர் பலி

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: விமானி, மருத்துவ அதிகாரிகள் உட்பட 5 பேரின் கதி என்ன? மீட்புப் பணிகள் தீவிரம்

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: விமானி, மருத்துவ அதிகாரிகள் உட்பட 5 பேரின் கதி என்ன? மீட்புப் பணிகள் தீவிரம்

முறைகேடுகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டேன் - பினாங்கு போலீஸ் தலைவர் எச்சரிக்கை

முறைகேடுகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டேன் - பினாங்கு போலீஸ் தலைவர் எச்சரிக்கை

முன்னாள் தபுங் ஹாஜி தலைவர் அப்துல் அஸீஸ் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகின்றார்

முன்னாள் தபுங் ஹாஜி தலைவர் அப்துல் அஸீஸ் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகின்றார்

இணைய மோசடிக்காரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் முன்மொழிவு - அமைச்சர் அஸாலினா ஆதரவு

இணைய மோசடிக்காரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் முன்மொழிவு - அமைச்சர் அஸாலினா ஆதரவு

முழங்கால் சிகிச்சைக்கான உள்வைப்பில் முறைகேடு: மூத்த மருத்துவ அதிகாரிக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்

முழங்கால் சிகிச்சைக்கான உள்வைப்பில் முறைகேடு: மூத்த மருத்துவ அதிகாரிக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்