மலாக்காவில் சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முழங்கால் சிகிச்சைக்கான உள்வைப்புகள் விநியோகத்தில், தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
50 வயதான அந்த அதிகாரிக்கு எதிராக ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை அவர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளார்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காக மலாக்கா எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்குச் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டதாகவும், கடந்த 2024 முதல் 2026-ஆம் ஆண்டு வரை இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.








