Sep 9, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: பயணிகள் 5 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: பயணிகள் 5 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது

Share:

சரவாக்கில் நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த 4 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விமானி உட்பட 5 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிரி வட்டார நிர்வாக அதிகாரியும், மிரி பிரிவு பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவருமான காலோங் லுவாங் ஐந்து பேரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.

எனினும் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மருத்துவ சேவைக்காக இயக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், மிரி விமான நிலையத்திலிருந்து லோங் லெல்லாங் நோக்கிப் புறப்பட்ட நிலையில், லோக் லெல்லாங் STOLport அருகே விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க MI-17 ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், வானிலை மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப மீட்புப் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related News