கோலாலம்பூர், ஜாலான் அம்பாங் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சீன நாட்டவர் ஒருவரை, முகமூடி அணிந்து வந்து கட்டியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் ஆடம்பரக் கடிகாரங்களைக் கொள்ளையடித்துத் தப்பினர்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2 முதல் 3 மணியளவில் பெவிலியன் எம்பசி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிகழ்ந்ததாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் அனாஸ் சுலைமான் தெரிவித்துள்ளார்.
மேலும், கொள்ளையர்கள் பாதிக்கப்பட்டவரின் கைபேசியைச் சேதப்படுத்தியதுடன், அவரது கடப்பிதழையும் பறித்துச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவத்தில் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தப்பிச் சென்ற கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.








