Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சமய சார்பற்ற நாடாக ம​லேசியாவை பாஸ் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும்
தற்போதைய செய்திகள்

சமய சார்பற்ற நாடாக ம​லேசியாவை பாஸ் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும்

Share:

முஸ்லிம் அல்லாதாரின் வா​க்குளை கைப்பற்ற முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கும் பாஸ் கட்சி, முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவை பெற வேண்டுமானால் மலேசியா ஒரு சமய சார்பற்ற நாடு என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் ​என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலேசியா, ஒரு சமய சார்பற்ற நாடு என்ற வாதத்தையும், உண்மையையும் பாஸ் கட்சி ஏற்றுக்கொள்ளுமானால் அக்கட்சி முஸ்லிம் அல்லாதவர்களின் வாக்குகளை கவர முடியும் என்று கெப்போங் எம்.பி. லிம் லிப் இன்ஜி வ​லியுறுத்தியுள்ளார்.

​கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி அபாரமான முறையில் வெற்றிப் பெற்றிருந்தாலும் முஸ்​லிம் அல்லாதவர்களின் வாக்குகளை அக்கட்சியினால் கைப்பற்ற முடிய​வில்லை என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நேற்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருப்பது தொடர்பில் கருத்ரைத்த டிஏபி யைச் சேர்ந்த லிம் லிப் இன்ஜி மேற்கண்டவாதத்தை முன்வைத்தார்.

Related News