Oct 17, 2026
Thisaigal NewsYouTube

e-hailing ஓட்டுநர் கடுமையாக தாக்கப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
e-hailing ஓட்டுநர் கடுமையாக தாக்கப்பட்டார்

அம்பாங்,அக்டோபர் 10-

காருக்குள் வாந்தி எடுத்ததற்காக கண்டித்த e-hailing வாகன ஒட்டுநர், இரு அந்நிய நாட்டவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், கம்போங் சேரஸ் பாரு-வில் நிகழ்ந்தது. காயமுற்ற அந்த e-hailing ஓட்டுநர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பின்னிரவு 12.40 மணியளவில் நிகழ்ந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் - லிருந்து கம்போங் சேரஸ் பாரு- ஆடம்பர அடுக்குமாடி வீட்டை நோக்கி அந்த இரு அந்நியர்களையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு e-hailing ஓட்டுநர் சென்று கொண்டிருந்த போது , அவ்விரு அந்நியர்களில் ஒருவர் காருக்குள்ளேயே வாந்தி எடுத்துள்ளார்.

சாலையோரத்தில் காரை நிறுத்திய வாகனமோட்டி, அது குறித்து கண்டித்ததைத் அவர், அந்த இரு நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஏசிபி முகமது ஆசம் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →