Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்தில் இன்று வெளியுறவுக் கொள்கை முதல் கம்போங் பாரு விவகாரம் வரை முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்படும்!
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தில் இன்று வெளியுறவுக் கொள்கை முதல் கம்போங் பாரு விவகாரம் வரை முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்படும்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.06-

15வது நாடாளுமன்ற, நான்காவது அமர்வின், மூன்றாவது கூட்டம் இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது.

இக்கூட்டத்தின் முதல் நாளான இன்று, மலேசியாவின் வெளியுறவுக் கொள்கைகளின் நிலைப்பாடு மற்றும் கம்போங் பாரு விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அசாதாரண அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, மலேசியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட சில முக்கிய மாற்றங்கள் குறித்து லெடாங் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் இப்ராஹிம் சையிட் நோ, வெளியுறவு அமைச்சரிடம் கேள்வி எழுப்பவுள்ளார்.

அதே வேளையில், கம்போங் பாரு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்மான் நஸ்ருடின், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கேள்வி எழுப்பவுள்ளார்.

மேலும், தேசிய கார்பன் வர்த்தகச் சந்தை சுற்றுச்சூழல் அமைப்பு, சட்டத்துறை, தற்காப்புத் துறை உள்ளிட்ட விவகாரங்களிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பவுள்ளனர்.

Related News