Jul 1, 2026
Thisaigal NewsYouTube
36 நிறுவனங்கள் பங்கேற்ற சிலாங்கூர் மாநில வேலைவாய்ப்பு கண்காட்சி
தற்போதைய செய்திகள்

36 நிறுவனங்கள் பங்கேற்ற சிலாங்கூர் மாநில வேலைவாய்ப்பு கண்காட்சி

Share:

சிலாங்கூர் மாநில அரசின் பெருந்திட்டமான 'ஜோப்கேர்' வேலைவாய்ப்புத் சந்தை, பெட்டாலிங் மாவட்ட அளவில் இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி, மாலை வரை பெட்டாலிங் ஜெயா, The Curve Mall, பேரங்காடியில் நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில அரசாங்கம், மாநில சமூக பாதுகாப்பு நிறுவனமான 'பெர்கேசோ' உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 'ஜோப்கேர்' நிகழ்வை, மனிதவளத் துறைக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பார்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த 36 முன்னணி நிறுவனங்கள் அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருந்தன. கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் மற்றும் சமூக பாதுகாப்பு நிறுவனமான PERKESO-வின் சிலாங்கூர் மாநில துணை தலைமை இயக்குநர் ரோஹானா முகமட்- டன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு, இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் 4 ஆயிரத்து 109 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

இவற்றில் 80 விழுக்காடு வேலை வாய்ப்புகள், 2,500 ரிங்கிட் சம்பளத்திற்கு மேற்பட்டது என்றும், அந்த 80 விழுக்காடு வேலை வாய்ப்புகள், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள், இது போன்ற வேலை வாய்ப்பு கண்காட்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இத்தகைய வேலை வாய்ப்புகள் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டும் என்று நினைத்து விடாமல் மாணவர்கள் சுயமாக அல்லது பெற்றோர்களுடன் இது போன்ற நிகழ்வில் கலந்து கொண்டு, தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்று பாபாராய்டு தெரிவித்தார்.

இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பொது மக்கள் பங்கேற்கும் வகையில் PERKESO பதிவு மற்றும் இலவச மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை