மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வெறுப்புணர்ச்சி தன்மையிலான அறிக்கைகளை வெளியிட்டு ஒரு வெடி மருந்தைப் போல முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது செயல்பட்டு வருகிறார் என்று கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்லஸ் சந்தியாகோ தெரிவித்துள்ளார். மலேசியாவின் பெயரையும், அதன் உரிமையும் மாற்றுவதற்கு மலாய்க்காரர் அல்லாதவர்கள் முயற்சி செய்வதாக கூறி நாட்டை பிளவுப்படுத்தும் நடவடிக்கையில் முன்னாள் பிரதமர் ஈடுபட்டு வருகிறார் என்று சார்லஸ் சந்தியாகோ குறிப்பிட்டார். இந்த நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள மலாய்க்காரர் அல்லாத மூத்த குடிமக்களுக்கு தங்க தாம்பளத்தில் குடியுரிமையைத் தந்து விடவில்லை. மாறாக, இந்த நாட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் சிந்திய வேர்வைக்காக குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்பதை துன் மகாதீர் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நாடு அனைவருக்கும் சொந்தமான நாடு என்ற மற்றொரு பேருண்மையையும் துன் மகாதீர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சார்லஸ் சந்தியாகோ கேட்டுக்கொண்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


