Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி
தற்போதைய செய்திகள்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

Share:

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிற பயணப் பெட்டியால் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று மாலை 5.55 மணியளவில் யாரும் உரிமை கோராத நிலையில் அந்தப் பயணப் பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக கூபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ராட்ஸி அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பெட்டியை ஸ்கேன் செய்தபோது, அதற்குள் போதைப்பொருள் அல்லது வெடிபொருட்கள் இருக்கக்கூடியதற்கான உருவங்கள் தென்பட்டதாக தெரிவித்தனர். இதனால் போலீசாரின் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக ஐசிக்யூஎஸ் வளாகம் சுமார் இரண்டு மணி நேரம் மூடப்பட்டது. பின்னர் இரவு 11 மணியளவில் பயணப் பெட்டி திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அப்போது பெட்டிக்குள் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் சோதனையில் துணிகள், எண்ணெய் கொண்ட ஒரு கொள்கலன், கருப்பு நிற முடி உலர்த்தி, ஷாம்பு மற்றும் லோஷன் ஆகியவை மட்டுமே இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்