Dec 8, 2025
Thisaigal NewsYouTube
வானிலை எச்சரிக்கை: ஜோகூர், சரவாக்கில் தொடர் கனமழை!
தற்போதைய செய்திகள்

வானிலை எச்சரிக்கை: ஜோகூர், சரவாக்கில் தொடர் கனமழை!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.07-

ஜோகூரிலும் சரவாக்கிலும் நாளை டிசம்பர் 8ஆம் தேதி திங்கட்கிழமை வரை தொடர் கனமழை பெய்யக்கூடும் என்று Tahap Waspada என்கிற கண்காணிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது மெட்மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை. ஜோகூரின் செகமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

சரவாக்கில் உள்ள கூச்சிங், செரியான், சமரஹான், பெதோங், சரிகேய், சிபு போன்ற பகுதிகளிலும் நாளை வரை தொடர் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது மைசுவாச்சா செயலி மூலமாக, உடனுக்குடன் வானிலை நிலவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என அதன் தலைவர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் அறிவுறுத்தினார்.

Related News