தீபாவளி திருநாளை கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு வார காலமே எஞ்சியிருக்கும் வேளையில் வசதி குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், தொழில்முனைவர்கள் மேம்பாடு மற்றும் கூட்டறவுக்கழக துணை அமைச்சருமான சரஸ்வதி கந்தசாமி, சுமார் 50 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி உதவிப்பொருட்களை இன்று மாலையில் வழங்கினார்.
கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள பூசார் கிட்மாட் ராயாட் எனும் தமது மக்கள் சேவை மையத்தில் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, வறுமை கோட்டின் கீழ் உள்ள இந்திய குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் தீபாவளி திருநாளுக்கு பலகாரங்கள், பதார்த்தங்களை செய்வதற்கான அத்தியாவசிய மூலப்பொருட்களையும் வழங்கி, அவர்களின் பொருளாதார சிரமங்களை குறைப்பதற்கு உதவிக் கரம் நீட்டினார்.
தவிர உதவிப்பொருட்களை பெற்றுக்கொண்டவர்கள், தங்களுடையை வருமானத்தை பெருக்கிக்கொள்வதற்கு சிறு, குறு தொழில் துறையில் ஈடுபடுவதற்காக அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.இதனால் வரும் காலங்களில் அவர்கள் வறுமைக்கோட்டியிலிருந்து விடுபட்டு, பொருளாதார ரீதியாக சற்று உயர வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.








