Feb 21, 2026
Thisaigal NewsYouTube
தமிழ் மொழி இந்திய இளைஞர்களின் டிஜிட்டல் வல்லமை: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் புகழாரம்
தற்போதைய செய்திகள்

தமிழ் மொழி இந்திய இளைஞர்களின் டிஜிட்டல் வல்லமை: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் புகழாரம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.21-

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ள மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், நவீன ஏஐ (AI) மற்றும் உலகமயமாக்கல் சூழலில் தமிழ் என்பது வெறும் இலக்கிய அடையாளமல்ல, அது மலேசிய இந்திய இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய ‘டிஜிட்டல் வல்லமை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

யுனெஸ்கோ அறிவித்துள்ள "பன்மொழிக் கல்வியில் இளைஞர்களின் குரல்" என்ற கருப்பொருளைச் சுட்டிக் காட்டிய அவர், தமிழை வெறும் பேச்சு மொழியாகக் கருதாமல், மெஷின் லேர்னிங் மற்றும் தரவு அறிவியலில் ஒரு முதன்மைத் தொழில்நுட்ப மொழியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

தாய்மொழியில் ஆளுமை கொண்ட பணியாளர்கள் சர்வதேச வேலைச் சந்தையில் 'உயர் மதிப்புமிக்க வல்லுநர்களாக' அங்கீகரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பன்மொழி அறிவு என்பது வருமானத்தை ஈட்டித் தரும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும் என்றார். நமது வேர் சார்ந்த அறிவுதான் உலக அரங்கில் நம்மைத் தனித்துவமாகக் காட்டும் எனக் குறிப்பிட்ட அவர், மனிதவள அமைச்சின் இலக்குகளில் மொழி ஆளுமையும் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்வதை உறுதிப்படுத்தினார்.

மேலும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் 'மலேசியா மடானி' தத்துவத்தின் அடிப்படையில், நமது கலாச்சாரப் பாரம்பரியத்தை பிளாக்செயின் மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பங்கள் வாயிலாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு (Blockchain) சேர்ப்பது காலத்தின் கட்டாயம் என்று அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டில் தமிழைத் தொழில்நுட்பத்தோடு பிணைப்பதே நாம் தாய்மொழிக்குச் செய்யும் ஆகச் சிறந்த தொண்டு என்றும் அவர் தனது செய்தியில் பதிவிட்டுள்ளார்.

Related News