ஆசியான் நாடுகளில் மிகச்சிறிய நாடான லாவோஸிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார். இன்று திங்கட்கிழமை தலைநகர் வியென்டியேனை சென்றடைந்த பிரதமர் அன்வாருக்கு மகத்தான் வரவேற்பு நல்கப்பட்டது.
அடுத்த ஆண்டு ஆசியான் மாநாட்டை ஏற்று நடத்தவிருக்கும் உபசரணை நாடு என்ற முறையில் பிரதமரின் இந்த லாவோஸ் பயணம், மலேசியாவிற்கும், லாவோஸிற்கும் இடையில் கட்டிக்காக்கப்பட்டு வரும் இரு வழி உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாவோஸ் பிரதமர் டாக்டர் சோன்ஸேய் சிப்ஹென்டோன் அழைப்பை ஏற்று அன்வார் மேற்கொண்டுள்ள இவ்வருகையானது, 2025 ஆம் ஆண்டில் ஆசியான் மாநாட்டை ஏற்று நடத்தும் நாடு என்ற முறையில் மலேசியாவிற்கு மிகுந்த பலாபலனை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


