சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களை விடுவிக்கக் கோரி, சுங்கை புலோ சிறைச்சாலைக்கு முன் சுமார் நூறு பேர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவது குறித்து விசாரணை செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் படைத்தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்துள்ளார்.
69 தடுப்புக் கைதிகளை பிரதிநிதிப்பதாக கூறும் சம்பந்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த அந்த நூறு பேர், சிறைச்சாலையின் முன் உண்ணா விரதப் போராட்டம் நடத்துவதற்கு காரணமாக இருந்த அதன் ஏற்பாட்டாளர்களை போலீசார் அடையாளம் கண்டு வருவதாக ஹுசைன் உமர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பங்கேற்பாளர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இதன் ஏற்பாட்டாளர்கள் நடப்பு விதிமுறைகளை மீறி இருப்பார்களேயானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹுசைன் உமர் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


