உடல் ரீதியாக குறைபாடுகள் கொண்ட சிறப்பு கவனிப்புக்குரிய மாணவர்கள் பயிலும் தொடக்கப்பள்ளியை சேர்ந்த 15 மாணவர்களை மானபங்கம் செய்ததாக நம்பப்படும் அப்பள்ளியின் உதவி நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த சந்தேக நபருக்கு எதிராக 12 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக சரவா மாநில போலீஸ் தலைவர் அட்டா ஸ்பாட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மற்றொரு சம்பவத்தில் 14 க்கும் 15 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதகவும் அவர் குறிப்பிட்டார்.








