Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கார் மரத்தில் மோதி கோர விபத்து: இருவர் பலி, நால்வர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

கார் மரத்தில் மோதி கோர விபத்து: இருவர் பலி, நால்வர் படுகாயம்

Share:

புத்ராஜெயா பிரசிண்ட் 1-இல் , தாமான் வெட்லண்ட் நோக்கிச் சென்றுகொண்டிருந்த புரோட்டோன் சாகா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு ஆடவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த மற்ற நால்வர் பலத்த காயமடைந்தனர். மோதிய வேகத்தில் காரில் இருந்தவர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மீட்புத்துறையினர் மதியம் சுமார் 11.58 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றது. பிரசிண்ட் 14 நிலையத்தைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்கள் புத்ராஜெயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்துச் சீர்செய்யும் பணிகளுக்காகச் சில மரக்கிளைகள் அகற்றப்பட்டன.

Related News