Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வாகனமோட்டிகளுடன் கத்தியுடன் கலவரம் செய்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

வாகனமோட்டிகளுடன் கத்தியுடன் கலவரம் செய்த ஆடவர் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 23-

கார் ஒன்றிலிருந்து ஜன்னலின் வழி தூக்கி வீசப்பட்ட குப்பையால் ஆத்திரமடைந்த ஆடவர் ஒருவர் கூர்மையான கத்தியை ஏந்திய நிலையில் வாகன மோட்டிகளுடன் கலவரத்தில் ஈடுபட்டதால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆடவர் ஒருவர் கத்தியை ஏந்திக் கொண்டு சாலையில் நின்ற காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் ரித்வான் முகமது நோர் கூறினார்

இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தாங்கள் புகார் ஒன்றை பெற்றதாக அவர் சொன்னார் .

தெலோக் பங்லிமா கரங் அருகில் நிகழ்ந்த இந்த கலவரம் தொடர்பில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கூர்மையான கத்தியுடன் நின்று கொண்டிருந்த ஆடவரை கைது செய்தனர்.

அதன் பின்னர் மற்றொரு 23 வயதுமிக்க இளைஞர் உட்பட 23,24 வயதுடைய இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்ததாக அவர் சொன்னார் .

இச்சம்பவம் 1958 ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்