Nov 14, 2025
Thisaigal NewsYouTube
பாங்கி விளையாட்டுச் சாதன விற்பனைக் கூடம் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது
தற்போதைய செய்திகள்

பாங்கி விளையாட்டுச் சாதன விற்பனைக் கூடம் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.14-

பாங்கி, எஸ்எம்கே ஜாலான் 3-இல் அமைந்துள்ள விளையாட்டுச் சாதன விற்பனைக் கூடம் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை காலை முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.

இவ்விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 6.54 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாங்கி மற்றும் காஜாங்கைச் சேர்ந்த சுமார் 16 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.

காலை 7.07 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள், 7.30 மணியளவில் முற்றிலும் அணைத்து விட்டதாக முக்லிஸ் முக்தார் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News