கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் அன்று கட்டாய ஓய்வு பெற்ற மலேசிய நாட்டின் சுகாதார இயக்குனர் நோர் ஹிசாம் பின் அப்துல்லாவின் இடத்தை நிரப்புவதற்காக மலேசியாவின் புதிய சுகாதார இயக்குநராக டத்தோ டாக்டர் முகமட் ரட்ஸி பின் அபு ஹசானை சுகாதார அமைச்சு நியமனம் செய்துள்ளது. முகமட் ரட்ஸி சுகாதார துறையில் பரந்த அனுபவம் கொண்டவர் என்றும் இதற்கு முன்பு அவர் கெடா மாநிலந்த்தின் சுல்தானா பஹியா மருத்துவமனையின் தலைவராக பொறுபேற்றுள்ளார் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மடானி மலேசிய கொள்கைக்கு ஒப்ப, சுகாதார துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தன்னோடு முகமட் ரட்ஸி செயல்படுவார் என்ற நம்பிக்கையுடன் தாம் அவரை புதிய சுகாதார இயக்குநராக நியமனம் செய்வதாக சுகாதார அமைச்சர் சலீன முஸ்தப்பா தனது பத்திரிக்கையாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








