Jun 29, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் என ஆள்மாறாட்டம் செய்து கூட்டுக் கொள்ளை: இருவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போலீஸ் என ஆள்மாறாட்டம் செய்து கூட்டுக் கொள்ளை: இருவர் மீது குற்றச்சாட்டு

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.24-

கடந்த வாரம் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காக இரண்டு ஆடவர்கள் இன்று ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

32 வயது Muhamad Khairul Mohamed Rafil மற்றும் 45 வயது Mazuan Mohd Nasir ஆகியோர் மாஜிஸ்திரேட் Nadratun Naim Mohd Saidi முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

தாங்கள் போலீஸ் அதிகாரிகள் இல்லை என்று தெரிந்தே, பொதுச் சேவை ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி இரவு 11.24 மணியளவில், பினாங்கு, ரெலாவ் பகுதியில் புளோக் 51 அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் மின்தூக்கி முன்புறம் இந்த குற்றச்செயலைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு