பந்திங் பள்ளியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகளை கல்வி அமைச்சு முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான என்.யு.டி.பி பொதுச்செயலாளர் , பௌசி சிங்கோன் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கையாள்வதற்கான பயிற்சி ஆசிரியர்களுக்கு இல்லை என்பதால், தீயணைப்புப் பயிற்சிகளைத் தாண்டி அவசரகால நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறப்புப் பாதுகாப்புப் பயிற்சிகளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று பௌசி சிங்கோன் கூறினார்.
பாதுகாப்புப் பணியாளர்களின் திறனை வலுப்படுத்த வேண்டும் என போலீசாரும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த திங்கள்கிழமை பந்திங்கில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவி ஒருவர் சக மாணவியால் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இக்கோரிக்கை எழுந்துள்ளது.








