Sep 24, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களுடன் முறையற்ற உறவு புகார் – விசாரணை முடியும்வரை ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
தற்போதைய செய்திகள்

மாணவர்களுடன் முறையற்ற உறவு புகார் – விசாரணை முடியும்வரை ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

Share:

மாணவர்களுடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாக புகார் செய்யப்பட்ட ஆசிரியர்கள், விசாரணை முடியும் வரை மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அல்லது மாநிலக் கல்வித் துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவர்.

மாணவர்களுடன் அவர்கள் தொடர்ந்து தொடர்பு கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வித் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அஸாம் அகமட் தெரிவித்தார்.

மாணவர்களுடன் தொடர்புடைய பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்து போலீஸ் துறை புகார் செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பாதி ஊதியத்தில் இடைநீக்கம் செய்யப்படலாம் என்றும் அவர் கூறினார்.

நேற்று, 17 வயது மாணவனுடன் பெண் ஆசிரியர் ஒருவர் முறையற்ற உறவு கொண்டிருந்ததாகக் கூறப்படும் சம்பவம், இருவரையும் தொடர்புபடுத்திய காணொளி மாணவரின் குடும்பத்தினருக்கும் பள்ளிக்கும் கிடைத்ததைத் தொடர்ந்து இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியர், அந்த 17 வயது மாணவனை, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஹோட்டல்களுக்கும், அவரின் வீட்டிற்கும் அழைத்து சென்று தகாத உறவில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கையில் டாக்டர் முகமட் அஸாம், இந்த நினைவுறுத்தலை வழங்கியுள்ளார்.

Related News