Sep 24, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிளில் நாயை இழுத்துச் சென்றதாகப் புகார் – பினாங்கு கால்நடை சேவைத் துறை விசாரணை
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளில் நாயை இழுத்துச் சென்றதாகப் புகார் – பினாங்கு கால்நடை சேவைத் துறை விசாரணை

Share:

பினாங்கு, பத்து லஞ்சாங் பகுதியில் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி நாய் ஒன்றை இழுத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பினாங்கு கால்நடை சேவைத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக புகார் கிடைத்துள்ளதை பினாங்கு கால்நடை சேவைத் துறை இயக்குநர் டாக்டர் சைரா பானு முகமட் ரெஜாப் உறுதிப்படுத்தினார்.

சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர், இரு ஆண்களையும் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்ட போதும், அவர்கள் நாயை தொடர்ந்து இழுத்துச் சென்றதாக விலங்குகள் மீட்புப் பணியாளர் டேவிட் யிம் தெரிவித்தார்.

பின்னர் அந்தப் பெண் புகார் அளித்ததுடன், சம்பவத்தைப் பதிவு செய்ததாக நம்பப்படும் காணொளி மற்றும் புகைப்படங்களையும் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.

கறுப்பு நிற நாய் பலத்த காயமடைந்திருக்கலாம் என்றும், சம்பவம் தொடர்பில் விலங்குகளைத் துன்புறுத்திய குற்றம் இருப்பது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News