ஆயர் குரோ, டிசம்பர்.29-
மலாக்கா, ஆயர் குரோ ஆர் & ஆர் ஓய்வுத் தளத்தில் மிகக் குறுகளான பாதையில் டிரேலர் லோரி ஒன்று, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை மோதித் தள்ளும் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 1:30 மணியளவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் ஆயர் குரோ ஆர் & ஆர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
அந்த டிரெய்லர் லோரி, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களை அடுத்தடுத்து இடித்துத் தள்ளியது. இதில் பல கார்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வாகனங்களில் இருந்த சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
லோரி ஓட்டுநரை வளைத்துப் பிடித்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் போது ஓட்டுநர் போதையில் இருந்தாரா அல்லது லோரியில் பிரேக் கோளாறு ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.








