Sep 22, 2026
Thisaigal NewsYouTube
சம்பந்தப்பட்ட ஆடவர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

சம்பந்தப்பட்ட ஆடவர் தேடப்படுகிறார்

Share:

மற்ற வாகனங்களின் டயர்களுக்குச் சேதத்தை விளைவிக்கும் தீய நோக்கத்துடன், காரிலிருந்து ஆணிகளை இரைத்துக்கொண்டு சென்ற நபரைப் போலீஸ் தேடி வருவதாக பத்து காஜா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி முஹம்மட் ராய் சுஹைமி சரிஃப் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் காணொளி தொடர்பில், AJK 869 என்ற பதிவு எண்ணைக் கொண்ட காரின் உரிமையாளரைப் போலீசார் தேடிவருவதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம், பத்து காஜா அருகில், பூசிங்கில் ஜாலான் ஈப்போ-லுமூட் சாலையின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

இது தொடர்பாக போலீஸ் புகார் ஒன்று பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டமுஹம்மட் ராய், தமது காரின் டயர்கள் சேதமுற்றது குறித்து ஆடவர் ஒருவர் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

Related News