Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பேரா சுல்தானைத் தொடர்புபடுத்திய சம்பவம்: சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு- விசாரணை வளையத்திற்குள் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய செய்திகள்

பேரா சுல்தானைத் தொடர்புபடுத்திய சம்பவம்: சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு- விசாரணை வளையத்திற்குள் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.03-

பேரா மாநில அளவில் கொண்டாடப்பட்ட தேசிய தின விழாவில் மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவைத் தொடர்புப்படுத்திய சர்ச்சைக்குரிய முக நூல் பதிவு தொடர்பில் பாஸ் கட்சியைச் சேர்ந்த மஞ்சோய் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஹாஃபெஸ் சப்ரி, மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

ஈப்போவில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்ட நிகழ்வில் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை நோக்கி ஓடிய பெண், எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று அந்த பாஸ் சட்டமன்ற உறுப்பினர், தனது முகநூல் பதிவில் தவறாக அடையாளம் காட்டியுள்ளார்.

ஒரு சீனப் பெண் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளார் என்று இனவாதத்தன்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை முகமட் ஹாஃபெஸ் வெளியிட்டு இருந்தார். அவர் முகநூலில் பதிவுச் செய்த சர்ச்சைக்குரிய கருத்து, இனவாதத்தன்மையிலானது என்று பலர் குற்றஞ்சாட்டினர். அது குறித்து பலர் போலீசில் புகார் செய்து இருந்தனர்.

தம்முடைய இந்த முகநூல் பதிவுக்கு முகமட் ஹாஃபெஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்ட போதிலும் அவர் தற்போது எம்சிஎம்சி விசாரணை வளையத்திற்குக் கொண்டு வரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News