Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மோட்டார் சைக்கிள்களில் ஆர்ப்பரித்த எஸ்.பி.எம். மாணவர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

மாராங், ஜன. 18-


எஸ்.பி.எம். தேர்வில் தங்களின் ஆகக்கடைசியான தேர்வு தாளை எழுதி முடித்து விட்ட களிப்பில், பள்ளிக்கு வெளியே மோட்டார் சைக்கிள்களின் இயந்திரத்தை முடுக்கி விட்டு இரைச்சலை ஏற்படுத்தி, அட்டகாசம் புரிந்த மாணவர்ளை போலீஸ் துறை கைது செய்துள்ளது.

திரெங்கானு, மாராங், தாமான் ரெக்ராசி பூவாவ் கெகாபுவில் நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் 59 சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எனினும் அ ந்த மாணவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அவர்களை சிறப்புத் தொழுகையில் ஈடுபட செய்து, நல்லுரை வழங்கப்பட்டதாக மாராங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமம் சோபினான் ரெட்ஸுவான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மோட்டார் சைக்கிள்களில் ஆர்ப்பரித்த எஸ்.பி.எம். மாணவர்கள் ... | Thisaigal News