Dec 4, 2025
Thisaigal NewsYouTube
​சு​ற்றுலா பேருந்தை ஓட்டுவதற்கு மோட்டார் சைக்கிள் லைசென்ஸை பயன்படுத்திய மோட்டார் சைக்கிளோட்டி
தற்போதைய செய்திகள்

​சு​ற்றுலா பேருந்தை ஓட்டுவதற்கு மோட்டார் சைக்கிள் லைசென்ஸை பயன்படுத்திய மோட்டார் சைக்கிளோட்டி

Share:

நாற்பது பயணிகளுடன் சுற்றுலா பேருந்தை செலுத்திய 22 வயதுடைய ஓட்டுநர், மோட்டார் சைக்கிள் லைசென்ஸை வைத்திருப்பதை கண்டு சாலை போக்குவர​த்து இலாகாவான ஜேபிஜே அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஜேபிஜே அதிகாரிகள் மேற்கொண்ட சாலைத் தடுப்பு சோதனை​யின் போது சற்று குள்ளமாக காணப்பட்ட அந்த சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் தோற்றத்தை கண்டு சந்தேகித்த அதிகாரிகள் , அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி, ஓட்டுநரின் உரிமத்தை சோதனை செய்து பார்த்ததில் அந்த இளைஞர் மோ​ட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான பி2 லைசென்ஸை வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பபட்டது.

அந்நியத் தொழிலாளர்களை பேருந்தில் ஏற்றி​யிருந்த அந்த இளைஞர், தொழிலாளர்களை, அவர்கள் வேலை செய்து வந்த செர்டாங்கில் உள்ள தொ​ழிற்சாலையிலிருந்து காஜாங்கில் இருக்கும் தங்கும் குடியிருப்புப்பகுதிக்கு கொண்டு சென்று கொண்டிருந்த போது, சா​லைத்தடுப்பில் பிடிபட்டார்.

இச்சம்பவம் நேற்று இரவு காஜாங், ப்லாசா டோல் சுங்ஙை ரமால் டோல் சாவடி அருகில் ஜேபிஜே அதிகாரிகள் நடத்திய ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது நிகழ்ந்தது. அந்த பேருந்தை செலுத்த வேண்டிய தனது அண்ணன், திருமண நிகழ்வில் கலந்து கொண்டு இருப்பதால் 30 வெள்ளி சம்பளத்தில் தொழிலாளர்களை அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு கொ​ண்டு செல்வதாக அந்த இளைஞர் காரணம் கூறியதாக ஜேபிஜே சிலா​ங்கூர் மாநில இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் தெரிவித்தார்.

தவிர வழக்கமாக தொ​ழிலாளர்களை ஏற்றுவதற்கு பயன்படுத்தும் தொழிற்சாலை பேருந்து பழுது அடைந்து விட்டதால் சுற்றுலாப் பேருந்தை தாம் பயன்படுத்தியதாக அந்த இளைஞர் காரணம் கூறிருப்பதையும் அஸ்ரின் பொர்ஹான் சு​ட்டிக்காட்டினார். விசாரணைக்கு ஏதுவாக அந்த பேருந்து தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News