ஜப்பானுடன் நிதித் துறையில் புதிய ஒத்துழைப்பையும் கூட்டாண்மைகளையும் ஆராய்வதில் மலேசியாவும் ஆசியானும் உறுதியாக உள்ளன என்று துணை நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் அறிவித்துள்ளார்.
நிதிச் சேவை, வர்த்தகம் மற்றும் முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, சுற்றுலா, கல்வி, தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றில் ஆசியான் - ஜப்பான் மூலோபாய ஒத்துழைப்பை விரிவுபடுத்த மலேசியாவும் ஆசியானும் உத்தேசித்துள்ளதாக அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
இதன் மூலம், மிகவும் வலுவான நிதிச் சூழலை உருவாக்கி, ஜப்பான் மற்றும் ஆசியான் நாடுகளுக்கும் பயனளிக்க முடியும் என்று சமீபத்தில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசியானின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


