மலேசியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர்ஏசியா, சீனாவிற்கான தனது புதிய வழித்தடத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. கோலாலம்பூரில் இருந்து தென் சீனாவில் அமைந்துள்ள Quanzhou, Guilin மற்றும் Chengdu ஆகிய மூன்று பகுதிகளுக்கு ஏர்ஏசியா தனது சேவையை விரிவுப்படுத்தவிருக்கிறது.
வரும் ஜூலை 18 ஆம் தேதி, கோலாலம்பூரிலிருந்து சீனா, Quanzhou மற்றும் Guilin அனைத்துலக விமான நிலையத்திற்குச் சேவையை தொடங்கும் அதே வேளையில், ஜூலை முதல் தேதி Chengdu அனைத்துலக விமான நிலையத்திற்கு ஏர்ஏசியா சிறகை விரிக்கவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வழித்தடங்களின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், 130 இடங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் உள்ளடக்கிய ஏர் ஏசியா, இன்று தொடங்கி மே 21 ஆம் தேதி வரை 20 சதவீதம் தள்ளுபடியை மக்களுக்கு வழங்குகிறது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


