கோத்தா பாரு, ஆகஸ்ட்.28-
கிளந்தான், கோத்தா பாரு, கம்போங் கூபாங் காசாங்கில் ஒரு பங்களா வீட்டின் மேற்கூரையில் சிக்கிக் கொண்ட இரண்டு ஆடுகள் பொது தற்காப்புப்படை வீரர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 9.56 மணியளவில் 54 வயது நபரிடமிருந்து தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக கோத்தா பாரு பொது தற்காப்புப்படை அதிகாரி முகமட் சைஃபுல் அஸாம் தெரிவித்தார்.
அந்த ஆடுகள் எவ்வாறு பங்களா வீட்டின் கூரை மீது ஏறியன என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று ஆடுகளின் உரிமையாளரான அந்த மாது தெரிவித்தார்.
அந்த இரண்டு ஆடுகளையும் பாதுகாப்பாகக் கீழே இறக்குவதற்கு பொது தற்காப்புப்படை வீரர்கள் சுமார் 35 நிமிடம் செலவிட்டனர்.








