போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த 17 வயது இளைஞர் உட்பட இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளந்தான், தும்பாட், கம்போங் சிம்பாங்கான் என்ற இடத்தில் கார் ஒன்றை தடுத்து போலீசார் சேதனையிட்ட போது போதைப்பொருளும், துப்பாக்கியும் கண்டு பிடிக்கப்பட்டதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹம்மது ஜாக்கி தெரிவித்தார்.
அந்த இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிமித் அண்ட் வேஸ்சோன் கைத்துப்பாக்கியில் 7 தோட்டாக்கள் இருந்தாக அவர் குறிப்பிட்டார்.








