Jun 16, 2026
Thisaigal NewsYouTube
மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது
தற்போதைய செய்திகள்

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

Share:

குவா மூசாங், மே.18-

தலைமை ஆசிரியையின் கணவர் என நம்பப்படும் ஒருவர் பள்ளிக் கழிவறையிலும் தொழுகை அறையிலும் மாணவிகளை எட்டிப் பார்த்த குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளந்தான், குவா மூசாங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

60 வயதான அந்த முதியவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் பள்ளி வளாகத்தில் நடமாடி, சிறுமிகளை எட்டிப் பார்த்ததாக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டண்ட் சிக் சூன் ஃபூ தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த இச்சம்பவம் குறித்து, 2017 சிறுவர் பாலியல் குற்றச் சட்டத்தின் கீழ், மேல் விசாரணை நடத்துவதற்காக அவர் தற்போது 7 நாட்கள் போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Related News