Sep 26, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மே.18-

சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட போலீஸ் தலைவர் ஒருவர், தனக்குக் கீழ் பணிபுரியும் பெண் அதிகாரியைப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அப்பெண் அதிகாரி, நேற்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரி தொடர்ந்து பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்த புகார் பெறப்பட்டுள்ளதை சரவாக் மாநில போலீஸ் தலைவர் ஸைனால் அப்துல்லாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது, இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News