Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
தற்போதைய செய்திகள்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

Share:

கோலாலம்பூர், மே.18-

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இன்று இஸ்தானா நெகாராவில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இச்சந்திப்பில் அரசாங்கத் தலைமை செயலாளர் ஷம்சூல் அஸ்ரி அபு பாக்காரும் கலந்து கொண்டார்.

ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் தொடர்பாக இச்சந்திப்பு நடைபெற்றதாக மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள பிரிவுகள் தொடர்ந்து அதிகரித்தால், திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என அன்வார் நேற்று ஜோகூரில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, இன்று இச்சந்திப்பு நடப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னதாக, கூட்டணிக்குள் உள்ள ஒப்பந்தங்கள் மதிக்கப்படாவிட்டால் ஜோகூர் மட்டும் அல்லாமல் நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பகாங் மற்றும் பினாங்கு உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அன்வார் அறிவித்திருந்தார்.

இது குறித்து பக்காத்தான் ஹராப்பான் தலைமையுடன் விவாதிக்க இருப்பதாகவும், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியம் என்றும் அன்வார் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்