Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்திற்கு முதல் பத்திரிகை
தற்போதைய செய்திகள்

நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்திற்கு முதல் பத்திரிகை

Share:

பினாங்கு தைப்பூச விழா கொண்டாடாட்டத்தில் நீடித்த பாரம்பரியத்தை கொண்டுள்ள நாட்டுக்கோட்டை செட்டியார்களின் தண்ணீர்மலை, அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தினருக்கு மரியாதை அளிக்கும் வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தினர் தைப்பூச விழா கொண்டாட்ட முதல் பத்திரிகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.

தண்ணீர்மலை, அருள்மிகு பாலதெண்டாயுதபாணி ஆலயத்தில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கலந்து கொள்ளும் வகையில் முதல் பத்திரிகையை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் டாக்டர் இரா. லிங்கேஸ்ரன், அற வாரியத்தின் ஆணையர் J. தினகரன் மற்றும் இதர பொறுப்பாளர்கள் இணைந்து வழங்கினர்.

Penang Street – டில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டியார்களின் கோவில் வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தினர் சார்பாக அறங்காவலர் டாக்டர் நாராயணன், தைப்பூச விழா, முதல் பத்திரிகையை பினாங்கு இந்து அறப்பணி வாரியப் பொறுப்பாளர்களிடமிருந்து பெற்று கொண்டார்.

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து ஒற்றுமையாக தைப்பூச விழாவை கொண்டாடுவதற்கு உறுதி பூண்டுள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரியம், இவ்வருட தைப்பூச விழாவை இந்துக்களின் ஒருமைப்பாட்டு விழாவாக அறிவித்துள்ளது.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்