Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் கொடியை பறக்கவிட்ட ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் கொடியை பறக்கவிட்ட ஆடவர் கைது

Share:

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான​ போர் ​தீவிரமடைந்து வரும் நிலையில் கோலத்திரெங்கானுவில் உள்ள வர்த்தகத் தளத்தில் இஸ்ரேல் கொடியை பறக்கவிட்ட 30 வயது மதிக்கத்தக்க வர்த்தகர் ஒருவரை போ​லீசார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட வர்த்தகர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

அந்த நபருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக திரெங்கானு மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் தெரிவித்துள்ளார். பிடிபட்ட நபர், போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களின் பின்னணியை கொண்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ மஸ்லி குறிப்பிட்டார்.

Related News