Jul 9, 2026
Thisaigal NewsYouTube
65 விழுக்காடு சீன வாக்காளர்கள் வாக்களித்தால் பிஎன் கோட்டைகளை பிஹெச் கைப்பற்றும்: ஆய்வறிக்கை
தற்போதைய செய்திகள்

65 விழுக்காடு சீன வாக்காளர்கள் வாக்களித்தால் பிஎன் கோட்டைகளை பிஹெச் கைப்பற்றும்: ஆய்வறிக்கை

Share:

வரும் சனிக்கிழமை நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் சீன வாக்காளர்களின் வாக்குப்பதிவு 65 விழுக்காட்டை எட்டினால், பாரிசான் நேஷனலின் முக்கியத் தொகுதிகளைப் பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்ற நல்ல வாய்ப்பு உள்ளதாக மலேசிய சீன ஆய்வுகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.

பிரசாரத்தின் தொடக்கத்தில் சுணக்கம் காட்டிய பக்காத்தான் ஹராப்பான், தற்போது தனது ஆதரவுத் தளத்தை நிலைநிறுத்தியுள்ளது. கடந்த 2022 தேர்தலில், 1000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பாரிசான் நேஷனல் வென்ற புக்கிட் பாசிர், பாரிட் யானி, செரோம் ஆகிய தொகுதிகளில் இந்த முறை பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதற்கு வெளிவட்டார வாக்காளர்களையும், பெரிகாத்தான் நேஷனல் பக்கமுள்ள மலாய் மிதவாத வாக்காளர்களையும் பக்காத்தான் ஹராப்பான் கவர வேண்டும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

தற்போது பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள உள்முகப் பிளவுகள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குச் சாதகமாக அமையலாம். கடந்த 2022 மாநிலத் தேர்தலில் சீன வாக்காளர்களின் பதிவு வெறும் 45 விழுக்காடாக மட்டுமே இருந்தது என்று அந்த மையம் சுட்டிக்காட்டியது.

Related News

பந்திங் பள்ளி கத்திக்குத்து: 15 வயது சந்தேக நபர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

பந்திங் பள்ளி கத்திக்குத்து: 15 வயது சந்தேக நபர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

பினாங்கில் 450,000 ரிங்கிட் மதிப்பிலான திரவ ஷாபு பறிமுதல்: ஒருவர் கைது

பினாங்கில் 450,000 ரிங்கிட் மதிப்பிலான திரவ ஷாபு பறிமுதல்: ஒருவர் கைது

உலகக் கிண்ண சூதாட்ட அழைப்பு மையம் முற்றுகை: 6 கொரியர்கள் உட்பட 11 பேர் கோலாலம்பூரில் கைது

உலகக் கிண்ண சூதாட்ட அழைப்பு மையம் முற்றுகை: 6 கொரியர்கள் உட்பட 11 பேர் கோலாலம்பூரில் கைது

ஓபிஆர் வட்டி விகிதம் 2.75% ஆக நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

ஓபிஆர் வட்டி விகிதம் 2.75% ஆக நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

பழைய விவாதங்களை விடுத்து புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துங்கள்: பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்

பழைய விவாதங்களை விடுத்து புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துங்கள்: பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு