Jul 10, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் 450,000 ரிங்கிட் மதிப்பிலான திரவ ஷாபு பறிமுதல்: ஒருவர் கைது
தற்போதைய செய்திகள்

பினாங்கில் 450,000 ரிங்கிட் மதிப்பிலான திரவ ஷாபு பறிமுதல்: ஒருவர் கைது

Share:

பினாங்கில் திரவ ஷாபு போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விநியோக கும்பலை முறியடித்துள்ள போலீஸார், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைக் கைது செய்து, 4 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 6-ஆம் தேதி இரவு 9 மணியளவில், நிபோங் திபால் பகுதியில் பினாங்கு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இச்சோதனையில் சுமார் 9 கிலோ கிராம் எடையுள்ள திரவ சியாபு பறிமுதல் செய்யப்பட்டதாகப் பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் தெரிவித்தார். இக்கும்பல் கடந்த மே மாதம் முதல் இப்பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டதற்கான ஆதாரம் இல்லை என்றாலும், அவருக்கு முந்தைய போதைப்பொருள் மற்றும் குற்றப் பின்னணிகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்