Jul 9, 2026
Thisaigal NewsYouTube
பந்திங் பள்ளி கத்திக்குத்து: 15 வயது சந்தேக நபர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது
தற்போதைய செய்திகள்

பந்திங் பள்ளி கத்திக்குத்து: 15 வயது சந்தேக நபர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

Share:

கோலா லங்காட், பந்திங்கில் உள்ள ஒரு தேசிய உயர் நிலைப் பள்ளியில் சக மாணவியைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் 15 வயது சக மாணவருக்கு எதிராக நாளை காலை 8 மணிக்கு தெலுக் டத்தோ நீதிமன்ற வளாகத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பள்ளி இடைவேளையின் போது நிகழ்ந்த இச்சம்பவத்தில், குற்றம் சாட்டப்படும் மாணவர் ஆட்டிசம் குறைபாடுடையவர் என்பதும், மன அழுத்தம் காரணமாக கடந்த 8 மாதங்களாகப் பள்ளிக்கு வராமல் வீட்டிலிருந்தே கல்வி கற்று வந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆன்லைனில் வாங்கிய கத்தியைப் பையில் மறைத்து எடுத்து வந்து, சக 3-ஆம் படிவ மாணவியை அவர் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மாணவியின் நுரையீரல் பாதிக்கப்பட்டு, 16 தையல்களுடன் தற்போது பந்திங் மருத்துவமனையில் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தைக் கொலை முயற்சி என வகைப்படுத்தி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related News