Jul 9, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள் வரும் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். இத்தகவலை அக்கூட்டணியின் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் தெரிவித்துள்ளார்.

கோலா பிலாவில் நடைபெறும் சிறப்பு நிகழ்வு ஒன்றில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி ம் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தற்போதைய மந்திரி பெசாரும், சிகாமாட் தொகுதியின் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினருமான அமினுடின் ஹருண், தாம் இம்முறை எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்பதை வெளிப்படுத்த மறுத்துவிட்டார். வரும் ஜூலை 14 வரை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.

இந்தத் தேர்தலில், நெகிரி செம்பிலானின் மொத்தம் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி போட்டியிடுகிறது. இதில் பிகேஆர் 16 இடங்களிலும், ஜசெக 11 இடங்களிலும், அமானா 9 இடங்களிலும் களம் இறங்குகின்றன. இவர்களின் கூட்டாட்சி நற்புறவுக் கூட்டணியான பாரிசான் நேஷனலும் அனைத்து 36 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 18-ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு ஜூலை 28-ஆம் தேதியும், இறுதி வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1-ஆம் தேதியும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

உலகக் கிண்ண சூதாட்ட அழைப்பு மையம் முற்றுகை: 6 கொரியர்கள் உட்பட 11 பேர் கோலாலம்பூரில் கைது

உலகக் கிண்ண சூதாட்ட அழைப்பு மையம் முற்றுகை: 6 கொரியர்கள் உட்பட 11 பேர் கோலாலம்பூரில் கைது

ஓபிஆர் வட்டி விகிதம் 2.75% ஆக நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

ஓபிஆர் வட்டி விகிதம் 2.75% ஆக நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

65 விழுக்காடு சீன வாக்காளர்கள் வாக்களித்தால் பிஎன் கோட்டைகளை பிஹெச் கைப்பற்றும்: ஆய்வறிக்கை

65 விழுக்காடு சீன வாக்காளர்கள் வாக்களித்தால் பிஎன் கோட்டைகளை பிஹெச் கைப்பற்றும்: ஆய்வறிக்கை

பழைய விவாதங்களை விடுத்து புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துங்கள்: பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்

பழைய விவாதங்களை விடுத்து புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துங்கள்: பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்

போலி ஆவணங்கள் மூலம் நி தி பெற முயற்சி: நிறுவனத்தின் 34 லட்சம் ரிங்கிட்டை முடக்கியது எஸ்பிஆர்எம்

போலி ஆவணங்கள் மூலம் நி தி பெற முயற்சி: நிறுவனத்தின் 34 லட்சம் ரிங்கிட்டை முடக்கியது எஸ்பிஆர்எம்

1எம்.டி.பி விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய ஒட்டுமொத்தத் தொகை 51.4 பில்லியன் ரிங்கிட்: நிதி அமைச்சு அதிரடி தகவல்

1எம்.டி.பி விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய ஒட்டுமொத்தத் தொகை 51.4 பில்லியன் ரிங்கிட்: நிதி அமைச்சு அதிரடி தகவல்