Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மனித வள அமைச்சர்களில் ஸ்டீவன் சிம் வித்தியாசமானவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மனித வள அமைச்சர்களில் ஸ்டீவன் சிம் வித்தியாசமானவர்

கோலாலம்பூர், ஜூன்.23-

மலேசிய வரலாற்றில் மனித வள அமைச்சர்களில் ஒரு வித்தியாசமான அமைச்சரை நாடு பெற்றுள்ளது. முற்றிலும் மாறுப்பட்டவர். இனம், மதம் சாராமல் சேவையாற்றும் வல்லமையை அவரிடம் காண முடிகிறது. களம் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதே இவரின் நோக்கம். இந்திய சமுதாயத்தைத் தனது தோளுடன் சுமந்து செல்கிறார்.

அதற்குச் சான்று, இந்தியர்களுக்கான தொழிட்நுட்பப் பயிற்சி களமான மிஸியின் மூலம் ஆயிரக்கணக்கான இந்திய இளையோர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மருத்துவப் படிப்பிற்கு தன்னிடம் ஆசிர்வாதம் பெற்ற ஓர் இந்திய மாணவியை நேரடியாகச் சென்று வாழ்த்திய பெருமை, இந்த மனித வள அமைச்சரையே சாரும். இவர்தான் ஸ்டீவன் சிம்.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று இன்று ஒரு மருத்துவராகப் பட்டம் பெற்ற குமாரி செளந்திரியாவை, அப்பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நேரடியாகச் சென்று வாழ்த்தி, மனித வளத்துறை அமைச்சர் என்ற நிலையுடன் மனித நேயமிக்க ஒரு தலைவர் என்பதை ஸ்டீவன் சிம் நிரூபித்து இருப்பது பலரின் கவன ஈர்ப்பாக மாறியுள்ளது.

ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிற்சியை நிறைவு செய்து, இன்று ஒரு மருத்துவராக பட்டம் பெற்ற டாக்டர் செளந்திரியா, குடும்பத்தை மட்டும் மகிழ்ச்சிப்படுத்தவில்லை, தம்மையும் பெருமைப்படுத்தியுள்ளார் என்று அமைச்சர் ஸீவன் சிம் வாழ்த்தினார்.

ஒரு பால் மரம் வெட்டும் தொழிலாளியின் பேத்தியான டாக்டர் செளந்திரியா, ஒரு மருத்துவதாகத் தன்னை உயர்த்திக் கொண்டது மூலம் தனது குடும்பத்தை மேம்படுத்தியுள்ளார். ஏழைகளுக்கு உதவிட வேண்டும். நேரத்துடன் கடமையாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் கைக்கடிகாரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார் அமைச்சர் ஸ்டீவன் சிம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →